-
1 ராஜாக்கள் 7:40-46பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
40 இவை தவிர, அண்டாக்களையும் சாம்பல் அள்ளும் கரண்டிகளையும்+ கிண்ணங்களையும்+ ஈராம்+ செய்தார். யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் ராஜா செய்யச் சொல்லியிருந்த எல்லா வேலைகளையும் அவர் செய்து முடித்தார்.+ 41 இரண்டு தூண்கள்,+ அவற்றின் உச்சியில் இருந்த கிண்ண வடிவ கும்பங்கள், இரண்டு கும்பங்களையும் அலங்கரித்த இரண்டு வலைப்பின்னல்கள்,+ 42 அந்த இரண்டு வலைப்பின்னல்களிலும் தொங்கவிட 400 மாதுளம்பழ வடிவங்கள் ஆகியவற்றைச் செய்தார்;+ ஒவ்வொரு வலைப்பின்னலிலும் இரண்டு வரிசை மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. இரண்டு தூண்களின் உச்சியிலிருந்த இரண்டு கும்பங்களைச் சுற்றிலும் இந்த வலைப்பின்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன. 43 பத்துத் தள்ளுவண்டிகள்,+ அவற்றில் வைக்க பத்துத் தொட்டிகள்,+ 44 ‘செம்புக் கடல்’ தொட்டி,+ அதன் கீழிருந்த 12 காளை உருவங்கள், 45 சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள், மற்ற பாத்திரங்கள் ஆகியவற்றையும் செய்தார்; இவை எல்லாவற்றையும் பளபளப்பான செம்பினால் செய்தார். சாலொமோன் ராஜா சொன்னபடியே, யெகோவாவின் ஆலயத்துக்காக இவை எல்லாவற்றையும் ஈராம் செய்தார். 46 யோர்தான் பிரதேசத்தில், சுக்கோத்துக்கும் சார்தானுக்கும் இடையிலுள்ள பகுதியில், இவற்றைக் களிமண் அச்சுகளில் ராஜா வார்த்தார்.
-