-
தானியேல் 3:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “சாத்ராக்! மேஷாக்! ஆபேத்நேகோ! நீங்கள் என் தெய்வங்களைக்+ கும்பிடாததும், நான் நிறுத்திய தங்கச் சிலையை வணங்காததும் உண்மைதானா? 15 ஊதுகொம்பும் நாதசுரமும் கின்னரமும் யாழும் சுரமண்டலமும் பைங்குழலும் மற்ற இசைக் கருவிகளும் வாசிக்கப்படும்போது, நான் நிறுத்திய சிலைக்குமுன் நீங்கள் விழுந்து வணங்கினால் நல்லது. இல்லையென்றால், எரிகிற நெருப்புச் சூளையில் அப்போதே வீசப்படுவீர்கள். எந்தத் தெய்வம் உங்களை என் கையிலிருந்து காப்பாற்றப்போகிறதென்று பார்க்கிறேன்!”+ என்றான்.
-