43 நிறைய தடவை கடவுள் அவர்களைக் காப்பாற்றினார்.+
ஆனாலும், அவர்கள் அவருக்கு அடங்கி நடக்காமல், அவருடைய பேச்சை மீறினார்கள்.+
குற்றம் செய்ததால் அவர்கள் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.+
44 ஆனால், அவர்கள் பட்ட வேதனையைக் கடவுள் பார்த்தார்.+
உதவிக்காக அவர்கள் கதறியதை அவர் கேட்டார்.+
45 அவர்களுக்காகத் தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.
அவர்கள்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருந்ததால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.+