உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+

  • உபாகமம் 32:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 யெகோவா தன்னுடைய ஜனங்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார்.+

      தன்னுடைய ஊழியர்களின் பலம் குறைந்துவிட்டதைப் பார்க்கும்போதும்,

      ஆதரவற்றவர்களும் அற்பமானவர்களும் மட்டுமே மீந்திருப்பதைப் பார்க்கும்போதும்,

      அவர் பரிதாபப்படுவார்.+

  • ஏசாயா 63:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 யெகோவா மாறாத அன்போடு செய்த செயல்களையும்

      அவருக்குப் புகழ் சேர்க்கும்படி செய்த செயல்களையும் பற்றி நான் சொல்வேன்.

      ஏனென்றால், யெகோவா இரக்கத்தினாலும் அளவுகடந்த அன்பினாலும்*

      எங்களுக்காக நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறார்.+

      இஸ்ரவேல் ஜனங்களுக்காக யெகோவா நிறைய நல்ல காரியங்களைச் செய்திருக்கிறார்.

  • புலம்பல் 3:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அவர் நமக்கு வேதனை தந்திருந்தாலும் அளவுகடந்த அன்போடு* இரக்கம் காட்டுவார்.+

  • யோவேல் 2:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்கள் உடையைக் கிழிக்காமல்+ உள்ளத்தைக் கிழியுங்கள்.+

      உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புங்கள்.

      அப்போது, அவர் தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு உங்களைத் தண்டிக்காமல் விட்டுவிடுவார்.*

      ஏனென்றால், அவர் கரிசனையும்* இரக்கமும் நிறைந்தவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்