உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யெகோவா மோசேயின் முன்னால் கடந்துபோகும்போது, “யெகோவா, யெகோவா, இரக்கமும்+ கரிசனையும்*+ உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர்,+ மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ உண்மையுள்ளவர்,*+

  • எண்ணாகமம் 14:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ‘யெகோவா சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்,+ குற்றத்தையும் மீறுதலையும் மன்னிப்பவர். ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விட மாட்டார். தகப்பன்கள் செய்யும் குற்றத்துக்காக மகன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்’ என்று நீங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்.+

  • நெகேமியா 9:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 உங்களுடைய பேச்சைக் கேட்க மறுத்தார்கள்.+ நீங்கள் செய்த மாபெரும் அற்புதங்களை மறந்தார்கள். அவர்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்து, எகிப்துக்கே அடிமைகளாய்த் திரும்பிப் போவதற்காக ஒரு தலைவரை நியமித்தார்கள்.+ ஆனால் கடவுளே, நீங்கள் மன்னிக்கிறவர்,* கரிசனையும்* இரக்கமும் உள்ளவர், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்.+ அதனால் நீங்கள் அவர்களைக் கைவிடவில்லை.+

  • சங்கீதம் 106:44, 45
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 ஆனால், அவர்கள் பட்ட வேதனையைக் கடவுள் பார்த்தார்.+

      உதவிக்காக அவர்கள் கதறியதை அவர் கேட்டார்.+

      45 அவர்களுக்காகத் தன்னுடைய ஒப்பந்தத்தை நினைத்துப் பார்த்தார்.

      அவர்கள்மேல் அளவுகடந்த அன்பு* வைத்திருந்ததால் அவர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டார்.*+

  • மீகா 7:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.

      உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+

      நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.

      ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+

      19 அவர் மறுபடியும் நமக்கு இரக்கம் காட்டுவார்;+ நம் அக்கிரமங்களை ஒழித்துக்கட்டுவார்.

      நம்முடைய எல்லா பாவங்களையும் ஆழ்கடலுக்குள் போட்டுவிடுவார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்