2மாகாணத்தை* சேர்ந்த அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சார் ராஜா பாபிலோனுக்குப்+ பிடித்துக்கொண்டு போயிருந்தான்.+ அவர்கள் அங்கிருந்து எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பி வந்து அவரவர் நகரங்களில் குடியேறினார்கள்.+
11ஜனங்களின் தலைவர்கள் எருசலேமில்+ குடியிருந்தார்கள். ஆனால் ஜனங்களைப் பொறுத்தவரை, பத்துப் பேரில் ஒருவர் அந்தப் பரிசுத்த நகரத்தில் குடியிருப்பதற்காக குலுக்கல்+ முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மீதி ஒன்பது பேர் அவரவர் நகரங்களிலேயே குடியிருந்தார்கள்.