-
எஸ்தர் 3:2-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் எல்லாரும், அவருடைய கட்டளைப்படி ஆமானுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். ஆனால், மொர்தெகாய் அப்படிச் செய்யவில்லை. 3 அதனால், அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் மொர்தெகாயைப் பார்த்து, “ராஜாவுடைய கட்டளையை ஏன் மீறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். 4 இப்படி ஒவ்வொரு நாளும் அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஆனால் மொர்தெகாய் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அவர்கள் ஆமானிடம், “மொர்தெகாய் செய்வது சரிதானா என்று நீங்களே பாருங்கள்” என்றார்கள்.+ தான் ஒரு யூதன்+ என்று மொர்தெகாய் அவர்களிடம் சொல்லியிருந்தார்.
5 மொர்தெகாய் தனக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழாததை ஆமான் கவனித்தபோது அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+
-