61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+
ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.+
உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,
சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,
கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,