10 யெகோவாவே, உங்களுடைய படைப்புகளெல்லாம் உங்களை மகிமைப்படுத்தும்.+
உங்களுக்கு உண்மையாக இருக்கிறவர்கள் உங்களைப் புகழ்வார்கள்.+
11 உங்களுடைய ஆட்சியின் மகிமையை அவர்கள் அறிவிப்பார்கள்.+
உங்களுடைய வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.+
ל [லாமெத்]
12 உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றி மனிதர்களுக்குச் சொல்வார்கள்.+
உங்களுடைய ஆட்சியின்+ சிறப்பையும் மேன்மையையும் பற்றி எல்லாருக்கும் சொல்வார்கள்.