-
சங்கீதம் 40:13-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யெகோவாவே, தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள்.+
யெகோவாவே, சீக்கிரமாக என் உதவிக்கு வாருங்கள்.+
14 என்னைத் தீர்த்துக்கட்ட வழிதேடுகிற எல்லாரும்
அவமானத்தில் தலைகுனியட்டும்.
நான் கஷ்டப்படுவதைப் பார்த்து சந்தோஷப்படுகிறவர்கள்
வெட்கப்பட்டுப் பின்வாங்கட்டும்.
15 என்னைப் பார்த்துக் கேலி செய்கிறவர்கள்
தங்களுக்கு வரும் அவமானத்தால் அதிர்ச்சி அடையட்டும்.
நீங்கள் தருகிற மீட்பை விரும்புகிறவர்கள்,
“யெகோவாவுக்கு மகிமை சேரட்டும்!”+ என்று எப்போதும் சொல்லட்டும்.
17 நானோ ஆதரவற்ற ஒரு ஏழை.
யெகோவாவே, என்னைக் கவனியுங்கள்.
-