-
1 நாளாகமம் 29:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பின்பு, தாவீது சபையார் எல்லாருக்கும் முன்பாக யெகோவாவைப் புகழ்ந்து, “எங்கள் மூதாதையான இஸ்ரவேலின் கடவுளே, யெகோவா தேவனே, உங்களுக்கு என்றென்றும் புகழ் சேரட்டும். 11 யெகோவாவே, நீங்கள் மகத்துவமும்+ வல்லமையும்+ அழகும் மாண்பும் கம்பீரமும்*+ உள்ளவர். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம்.+ யெகோவாவே, ஆட்சி உங்களுடையது.+ நீங்கள்தான் எல்லாருக்கும் தலைவர்.
-
-
சங்கீதம் 78:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 நான் வாய் திறந்து பழமொழி சொல்வேன்.
பூர்வ காலப் புதிர்களை விளக்குவேன்.+
3 எங்களுடைய முன்னோர்கள் எங்களுக்குச் சொன்ன விஷயங்களையும்,+
அவர்களிடம் நாங்கள் கேட்டுத் தெரிந்துகொண்ட விஷயங்களையும்,
4 அவர்களுடைய வம்சத்தாருக்கு மறைக்காமல் சொல்வோம்.
யெகோவாவின் அருமையான* செயல்களைப் பற்றியும்,
அவருடைய பலத்தைப் பற்றியும்,+ அவர் செய்த அற்புதங்களைப்+ பற்றியும்
வருங்காலத் தலைமுறைக்கு விளக்கிச் சொல்வோம்.+
-