உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உங்கள் கண்களால் பார்த்தவற்றை மறந்துவிடாதபடி மிகக் கவனமாகவும் ஜாக்கிரதையாகவும் இருங்கள். இவை உங்கள் வாழ்நாளெல்லாம் உங்களுடைய நெஞ்சைவிட்டு நீங்கக் கூடாது. இவற்றை உங்களுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.+

  • உபாகமம் 6:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இன்று நான் சொல்கிற இந்த வார்த்தைகளை உங்கள் இதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். 7 அவற்றை உங்களுடைய பிள்ளைகளின் மனதில் பதிய வைக்கவும் வேண்டும்.*+ வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+

  • உபாகமம் 6:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 நீங்கள் அவர்களிடம், ‘எகிப்தில் நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாக இருந்தோம், ஆனால் யெகோவா தன்னுடைய கைபலத்தால் அங்கிருந்து எங்களைக் கூட்டிக்கொண்டு வந்தார்.

  • உபாகமம் 11:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 இந்த வார்த்தைகளை உங்களுடைய இதயத்திலும் மனதிலும் நீங்கள் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை உங்கள் கையில் ஒரு நினைப்பூட்டுதல் போலவும் நெற்றியில் ஒரு அடையாளம் போலவும் கட்டிக்கொள்ள வேண்டும்.+ 19 அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்திருக்கிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவற்றைப் பற்றிப் பேச வேண்டும்.+

  • யோசுவா 4:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இந்தக் கற்கள் உங்களுக்கு அடையாளச் சின்னங்களாக இருக்கும். எதிர்காலத்தில் உங்களுடைய பிள்ளைகள் உங்களிடம், ‘இந்தக் கற்கள் ஏன் இங்கே இருக்கின்றன?’ என்று கேட்டால்,+ 7 நீங்கள் அவர்களிடம், ‘ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் யோர்தான் ஆற்றை யெகோவா பிரிந்துபோக வைத்தார்.+ அதனால், அந்தப் பெட்டி யோர்தானைக் கடந்துபோனபோது தண்ணீர் பிரிந்து நின்றது. இந்தக் கற்கள் இந்தச் சம்பவத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு என்றென்றும் ஞாபகப்படுத்தும்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்