உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 10:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 பொல்லாதவன் தன்னுடைய ஆணவத்தினால் கடவுளைத் தேடாமல் இருக்கிறான்.

      “கடவுளே இல்லை” என்பதுதான் அவனுடைய நினைப்பு.+

  • சங்கீதம் 10:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அவன் தன்னுடைய இதயத்தில்,

      “கடவுள் மறந்துவிட்டார்.+

      தன்னுடைய முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

      அவர் கவனிப்பதே இல்லை” என்று சொல்லிக்கொள்கிறான்.+

  • சங்கீதம் 94:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 இன்னும் எவ்வளவு காலத்துக்கு, யெகோவாவே,

      இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொல்லாதவர்கள் ஆட்டம் போடுவார்கள்?+

  • சங்கீதம் 94:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 “இதையெல்லாம் ‘யா’* பார்க்க மாட்டார்.+

      இதையெல்லாம் யாக்கோபின் கடவுள் கண்டுகொள்ள மாட்டார்” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+

  • எசேக்கியேல் 8:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அப்போது அவர், “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்களின் பெரியோர்கள் ஒவ்வொருவரும் சிலைகளை வைத்திருக்கிற இருட்டான உள்ளறைகளில் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தாயா? ‘யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை. யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார்’+ என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்” என்றார்.

  • செப்பனியா 1:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அந்தச் சமயத்தில் நான் விளக்குகளை ஏந்திக்கொண்டு எருசலேமெங்கும் தேடிப் பார்ப்பேன்.

      அலட்சியமாக இருப்பவர்களை* கண்டுபிடித்துத் தண்டிப்பேன்.

      அவர்கள் தங்களுடைய உள்ளத்தில்,

      ‘யெகோவா நல்லதும் செய்ய மாட்டார், கெட்டதும் செய்ய மாட்டார்’ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்