உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 32:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள்*+ என்று எனக்குத் தெரியும்.

  • உபாகமம் 1:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 அதை நான் உங்களிடம் சொன்னேன், ஆனால் நீங்கள் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. யெகோவாவின் கட்டளையை மீறி நடந்தீர்கள். அகங்காரத்தோடு* மலைமேல் ஏறிப் போனீர்கள்.

  • உபாகமம் 31:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 உங்களுடைய கீழ்ப்படியாத போக்கும்+ பிடிவாத குணமும்+ எனக்கு நன்றாகத் தெரியும். நான் உயிரோடு இருக்கும்போதே நீங்கள் யெகோவாவின் பேச்சை இந்தளவுக்கு மீறுகிறீர்கள் என்றால், நான் இறந்த பின்பு இன்னும் எந்தளவுக்கு மீறுவீர்கள்!

  • 2 ராஜாக்கள் 17:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரையும், தரிசனக்காரர்கள் ஒவ்வொருவரையும் அனுப்பி இஸ்ரவேலையும் யூதாவையும் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ “பொல்லாத வழிகளைவிட்டு மனம் திருந்துங்கள்!+ என்னுடைய கட்டளைகளுக்கும் சட்டதிட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களுடைய முன்னோர்கள் மூலம் நான் கொடுத்த எல்லா சட்டங்களுக்கும், என்னுடைய தீர்க்கதரிசிகள் மூலம் நான் சொன்ன எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று சொல்லியிருந்தார். 14 ஆனால், அவர் பேச்சை அவர்கள் கேட்கவில்லை. தங்களுடைய கடவுளான யெகோவாமீது விசுவாசம் வைக்காத முன்னோர்களைப் போலவே இவர்களும் முரட்டுப் பிடிவாதம் பிடித்தார்கள்.+

  • எசேக்கியேல் 20:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 அங்கே அவர்களுடைய மகன்களிடம்,+ ‘உங்கள் முன்னோர்கள் போன வழியில் போகாதீர்கள்,+ அவர்களுடைய நீதித்தீர்ப்புகளைக் கடைப்பிடிக்காதீர்கள், அவர்களுடைய அருவருப்பான சிலைகளை வணங்கி உங்களைத் தீட்டுப்படுத்தாதீர்கள்.

  • அப்போஸ்தலர் 7:51
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 51 பிடிவாதக்காரர்களே, இதயங்களிலும் காதுகளிலும் விருத்தசேதனம் செய்யாதவர்களே, கடவுளுடைய சக்தியை நீங்கள் எப்போதும் எதிர்க்கிறீர்கள்; உங்கள் முன்னோர்கள் செய்தது போலவே நீங்களும் செய்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்