-
எரேமியா 7:23, 24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 ஆனால், “நீங்கள் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்; அப்போது நான் உங்கள் கடவுளாக இருப்பேன், நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்.+ என்னுடைய எல்லா கட்டளைகளின்படியும் நீங்கள் நடக்க வேண்டும். அப்போது, சந்தோஷமாக வாழ்வீர்கள்”+ என்று மட்டும் சொன்னேன்.’ 24 அவர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை.+ அதற்குப் பதிலாக, தங்களுடைய திட்டங்களின்படியே நடந்தார்கள், தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ முன்னோக்கிப் போவதற்குப் பதிலாகப் பின்னோக்கியே போனார்கள்.
-
-
எரேமியா 11:7, 8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 உங்கள் முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த நாளிலிருந்து இன்றுவரை நான் எச்சரிப்பு கொடுத்து வந்திருக்கிறேன். “என் பேச்சைக் கேட்டு நடங்கள்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன்.+ 8 ஆனால், உங்கள் முன்னோர்கள் அதைக் காதில் வாங்கவே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய பொல்லாத இதயத்தின் போக்கிலேயே பிடிவாதமாகப் போனார்கள்.+ அதனால், நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காமல்போன இந்த ஒப்பந்தத்தின் எல்லா வார்த்தைகளும் அவர்களுக்குப் பலிக்கும்படி செய்தேன்’ என்று அறிவிப்பு செய்” என்றார்.
-