-
யாத்திராகமம் 1:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பிற்பாடு, யோசேப்பைப் பற்றித் தெரியாத ஒரு புதிய ராஜா எகிப்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான். 9 அவன் தன்னுடைய ஜனங்களிடம், “பாருங்கள்! இஸ்ரவேலர்கள் நம்மைவிட ஏராளமாகப் பெருகிவிட்டார்கள், பலத்திலும் நம்மை மிஞ்சிவிட்டார்கள்.+ 10 நாம் சாமர்த்தியமாக ஏதாவது செய்து அவர்கள் பெருகாதபடி தடுக்க வேண்டும். இல்லையென்றால், எதிரிகள் போர் செய்ய வரும்போது இவர்கள் அவர்களோடு சேர்ந்துகொண்டு நம்மைத் தோற்கடித்துவிட்டு இந்தத் தேசத்திலிருந்து தப்பித்துவிடுவார்கள்” என்றான்.
-
-
எஸ்தர் 3:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அதனால், மொர்தெகாயை ஒழித்துக்கட்ட நினைத்தான். ஆனாலும், மொர்தெகாயின் இனத்தாரைப் பற்றி ராஜாவின் ஊழியர்கள் தன்னிடம் சொல்லியிருந்ததால் அவர்களையும் சேர்த்து ஒழித்தால்தான் தனக்குக் கௌரவம் என்று நினைத்தான். அதனால், அகாஸ்வேருவின் சாம்ராஜ்யம் முழுவதும் வாழ்ந்த மொர்தெகாயின் இனத்தாரான யூதர்கள் எல்லாரையும் தீர்த்துக்கட்ட வழிதேடினான்.
-