உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 2:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:

      யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.+

      எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.

      எல்லா தேசத்து ஜனங்களும் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+

       3 அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.+

  • சகரியா 14:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 முழு பூமிக்கும் யெகோவா ராஜாவாக இருப்பார்.+ அந்த நாளில், எல்லாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவார்கள்,+ அவருடைய பெயரை மட்டும்தான் புகழ்வார்கள்.+

  • வெளிப்படுத்துதல் 7:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 இதற்குப் பின்பு, எந்த மனிதனாலும் எண்ண முடியாதளவுக்குத் திரள் கூட்டமான மக்கள் சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்பதைப் பார்த்தேன்; அவர்கள் எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்கள்.+ அவர்கள் வெள்ளை உடைகளைப் போட்டுக்கொண்டு,+ கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.+ 10 அவர்கள் உரத்த குரலில், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற+ எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்”+ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்