-
சங்கீதம் 72:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,
ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும்
அவருக்குக் குடிமக்கள் இருப்பார்கள்.+
-
மீகா 4:1-3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 கடைசி நாட்களில் இப்படி நடக்கும்:
யெகோவாவின் ஆலயம் இருக்கிற மலை+ எல்லா மலைகளுக்கும் மேலாக உறுதியாய் நிலைநிறுத்தப்படும்.
எல்லா குன்றுகளுக்கும் மேலாக அது உயர்த்தப்படும்.
பலதரப்பட்ட ஜனங்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள்.+
2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,
“வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.
யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+
அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.
நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.
ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*
எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.
3 பலதரப்பட்ட ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.+
தூரத்தில் இருக்கிற பெரிய ஜனக்கூட்டங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.
அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.
ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+
ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.
போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+
-
-
-