4 என் ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
என் தேசத்து மக்களே,+ கவனித்துக் கேளுங்கள்.
நான் ஒரு சட்டத்தைக் கொடுப்பேன்.+
என்னுடைய நியாயத்தை வெளிச்சம்போல் மக்கள்மேல் பிரகாசிக்க வைப்பேன்.+
5 நான் சீக்கிரத்தில் நீதி செய்வேன்,+
உங்களுக்கு மீட்பு தருவேன்.+
என் அதிகாரத்தினால் ஜனங்களுக்குத் தீர்ப்பு வழங்குவேன்.+
தீவுகள் என்மேல் நம்பிக்கை வைக்கும்.+
நான் நடவடிக்கை எடுப்பதற்காக அவை காத்திருக்கும்.