-
யோசுவா 9:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 இஸ்ரவேலர்கள் அவர்களைத் தாக்கவில்லை. ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் ஜனங்களின் தலைவர்கள் அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்திருந்தார்கள்.+ அதனால், அந்தத் தலைவர்களுக்கு விரோதமாக இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் முணுமுணுத்தார்கள். 19 அப்போது அந்தத் தலைவர்கள் எல்லாரும் ஜனங்களிடம், “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் பெயரில் நாங்கள் அவர்களுக்கு ஏற்கெனவே உறுதிமொழி கொடுத்துவிட்டோம். அதனால் அவர்களைத் தாக்குவதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. 20 அவர்களுக்கு உறுதிமொழி கொடுத்திருப்பதால், அவர்களை உயிரோடு விட்டுவிடலாம். இல்லையென்றால் கடவுளுடைய கோபத்துக்கு ஆளாகிவிடுவோம்”+ என்று சொன்னார்கள்.
-
-
நியாயாதிபதிகள் 11:34, 35பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 பின்பு, மிஸ்பாவிலிருந்த+ தன்னுடைய வீட்டுக்கு யெப்தா வந்தார். அப்போது, அவருடைய மகள் கஞ்சிராவைத் தட்டிக்கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவரை வரவேற்க வெளியே வந்தாள். அவள் அவருடைய ஒரே மகள், அவளைத் தவிர அவருக்கு வேறு மகளோ மகனோ இல்லை. 35 அவர் அவளைப் பார்த்தவுடன் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, “ஐயோ, என் மகளே! என் இதயத்தை நொறுக்கிவிட்டாயே! உன்னையே நான் அனுப்ப வேண்டியதாகிவிட்டதே! நான் வாய் திறந்து யெகோவாவிடம் சொல்லிவிட்டேன், அதை என்னால் மாற்ற முடியாதே”+ என்றார்.
-
-
சங்கீதம் 50:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 உன்னுடைய நன்றிகளைக் கடவுளுக்குப் பலியாகச் செலுத்து.+
உன் நேர்த்திக்கடன்களை உன்னதமான கடவுளுக்குச் செலுத்து.+
-