-
1 நாளாகமம் 16:28-33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்,
யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+
29 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்;+
காணிக்கையோடு அவர் முன்னால் வாருங்கள்.+
பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*+
30 பூமியெங்கும் உள்ளவர்களே! அவர் முன்னால் நடுநடுங்குங்கள்!
பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது.+
31 வானம் சந்தோஷப்படட்டும், பூமி பூரித்துப்போகட்டும்;+
‘யெகோவா ராஜாவாகிவிட்டார்!’ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.+
32 கடலும் அதில் நிறைந்திருப்பவையும் முழக்கம் செய்யட்டும்;
வயல்களும் அவற்றிலுள்ள அனைத்தும் ஆனந்தப்படட்டும்.
33 அவற்றோடு சேர்ந்து காட்டு மரங்களும் கடவுளுக்குமுன் சந்தோஷக் குரல் எழுப்பட்டும்.
ஏனென்றால், யெகோவா பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார்.
-