உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 16:8-13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

      அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+

       9 அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்,+

      அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+

      10 அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள்.+

      யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.+

      11 யெகோவாவைத் தேடுங்கள்,+ அவரிடம் பலம் கேட்டு வேண்டுங்கள்.

      எப்போதும் அவருடைய முகத்தையே நாடுங்கள்.+

      12 அவருடைய ஊழியரான இஸ்ரவேலின் சந்ததியே,+ யாக்கோபின் வம்சமே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே!+

      13 அவர் செய்த அதிசயமான செயல்களையும்+ அற்புதங்களையும்

      அவர் கொடுத்த நீதித்தீர்ப்புகளையும் நினைத்துப் பாருங்கள்.

  • சங்கீதம் 96:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்.

      அவருடைய அற்புதமான செயல்களைப் பற்றி எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.+

  • சங்கீதம் 145:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உங்களுடைய ஆட்சியின் மகிமையை அவர்கள் அறிவிப்பார்கள்.+

      உங்களுடைய வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.+

      ל [லாமெத்]

      12 உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றி மனிதர்களுக்குச் சொல்வார்கள்.+

      உங்களுடைய ஆட்சியின்+ சிறப்பையும் மேன்மையையும் பற்றி எல்லாருக்கும் சொல்வார்கள்.

  • ஏசாயா 12:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அந்த நாளில் நீங்கள் இப்படிச் சொல்வீர்கள்:

      “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

      அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+

      அவருடைய பெயரே உயர்ந்தது என்று அறிவியுங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்