-
உபாகமம் 7:18, 19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவர்களைப் பார்த்து நீங்கள் பயப்படக் கூடாது.+ பார்வோனுக்கும் எகிப்திலுள்ள எல்லாருக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா செய்த எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.+ 19 அங்கே உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுடைய கண் முன்னால் கொடிய தண்டனைகளைக் கொடுத்து, அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து,+ தன்னுடைய கைபலத்தாலும் மகா வல்லமையாலும் உங்களைக் கூட்டிக்கொண்டு வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.+ நீங்கள் பார்த்துப் பயப்படுகிற ஜனங்களுக்கெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா அப்படித்தான் செய்வார்.+
-