உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 11:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 மோசேக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியின்படியே,+ எல்லா தேசத்தையும் யோசுவா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பின்பு, அதை இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகப் பிரித்துக் கொடுத்தார். அவரவர் கோத்திரத்துக்குச் சேர வேண்டிய பங்கின்படியே பிரித்துக் கொடுத்தார்.+ தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+

  • யோசுவா 21:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 இஸ்ரவேலர்களின் முன்னோர்களுக்கு வாக்குக் கொடுத்த+ எல்லா தேசத்தையும் யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அங்கே குடியிருந்தார்கள்.+

  • நெகேமியா 9:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அவர்களுக்கு ராஜ்யங்களையும் தேசங்களையும் பகுதி பகுதியாகப் பங்குபோட்டுக் கொடுத்தீர்கள்.+ அதனால் எஸ்போனின்+ ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும்+ பாசானின் ராஜாவாகிய ஓகின்+ தேசத்தையும் அவர்கள் கைப்பற்றினார்கள்.

  • சங்கீதம் 78:55
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 55 மற்ற தேசத்து மக்களை அவர்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்.+

      தேசத்தை அளவுநூலால் அளந்து அவர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+

      இஸ்ரவேல் கோத்திரங்களை அவரவர் வீடுகளில் குடியேற்றினார்.+

  • அப்போஸ்தலர் 13:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பின்பு, கானான் தேசத்திலிருந்த ஏழு இனத்தவர்களை ஒழித்து, அந்தத் தேசத்தை இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகக் கொடுத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்