9 யெகோவாவின் ஜனங்கள்தான் அவருடைய செல்வம்.+
யாக்கோபுதான் அவருடைய சொத்து.+
10 அவனை வனாந்தரத்தில்+ அவர் கண்டுபிடித்தார்.
மிருகங்கள் ஓலமிடும் வெறுமையான பாலைவனத்தில்+ அவனைப் பார்த்தார்.
வேலிபோல் அவனைச் சூழ்ந்து நின்று பாதுகாத்தார்,+
கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டார்.
கண்மணிபோல் காத்தார்.+