4 ஆரோன் அந்தத் தங்கத்தை வாங்கி, செதுக்கும் கருவியால் செதுக்கி, ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்தார்.+ அப்போது ஜனங்களில் சிலர், “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த தெய்வம் இதுதான்!” என்று சொன்னார்கள்.+
12 பின்பு யெகோவா என்னிடம், ‘உடனே கீழே இறங்கிப் போ! நீ எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த ஜனங்கள் தறிகெட்டு நடக்கிறார்கள்.+ எவ்வளவு சீக்கிரமாக என் வழியைவிட்டு விலகிவிட்டார்கள்! ஒரு உலோகச் சிலையை உண்டாக்கி அதை வணங்குகிறார்கள்’+ என்றார்.