உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 32:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 எகிப்தியர்கள் உங்களைப் பற்றித் தப்பாகப் பேசுவதற்கு ஏன் இடம் தர வேண்டும்? அவர்கள், ‘இஸ்ரவேலர்களை மலையில் கொன்றுபோட்டு இந்தப் பூமியிலிருந்தே ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுதான் அவர்களுடைய கடவுள் அவர்களைக் கூட்டிக்கொண்டு போனார்’ என்று சொல்வார்களே.+ அதனால் உங்களுடைய கடும் கோபத்தை விட்டுவிடுங்கள். தயவுசெய்து, இந்த ஜனங்களை அழிக்க வேண்டுமென்ற உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.

  • எண்ணாகமம் 14:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்படியிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களை நீங்கள் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டால், உங்களுடைய பெயரையும் புகழையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற தேசத்தாரெல்லாம் என்ன சொல்வார்கள்? 16 ‘இந்த ஜனங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேசத்துக்கு யெகோவாவினால் இவர்களைக் கூட்டிக்கொண்டு போக முடியவில்லை, அதனால்தான் இவர்களை வனாந்தரத்தில் அழித்துவிட்டார்’ என்று சொல்ல மாட்டார்களா?+

  • உபாகமம் 32:26, 27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 நான் உங்களிடம், “உங்களைச் சிதறிப்போக வைத்துவிடுவேன்,

      உங்களைப் பற்றிய நினைவே உலகத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்” என்று சொல்ல நினைத்தேன்.

      27 ஆனால் எதிரிகள் உண்மையைப் புரட்டி,+ “எங்கள் வீரத்தால்தான் ஜெயித்தோம்,+

      யெகோவா எதுவும் செய்யவில்லை” என்று பெருமையடிப்பார்களோ என்று நினைத்தேன்.+

      அதனால் அப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

  • சங்கீதம் 79:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று மற்ற தேசத்தார் ஏன் கேட்க வேண்டும்?+

      உங்கள் ஊழியர்களைக் கொன்றவர்கள்* பழிவாங்கப்பட்டதை எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்ளட்டும்!

      அது எங்கள் கண் முன்னால் நடக்கட்டும்!+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்