-
1 சாமுவேல் 23:26-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 மலையின் ஒரு பக்கத்தில் சவுல் வந்தபோது, தாவீதும் அவருடைய ஆட்களும் மலையின் இன்னொரு பக்கத்தில் இருந்தார்கள். சவுலிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க தாவீது வேக வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.+ ஆனால், தாவீதையும் அவருடைய ஆட்களையும் வளைத்துப் பிடிக்க சவுலும் அவருடைய ஆட்களும் நெருங்கிவிட்டார்கள்.+ 27 அப்போது தூதுவன் ஒருவன் சவுலிடம் வந்து, “உடனே வாருங்கள், பெலிஸ்தியர்கள் நம் தேசத்துக்குள் வந்து திடீர்த் தாக்குதல் நடத்துகிறார்கள்” என்றான். 28 சவுல் அதைக் கேட்டதும், தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டு+ பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போனார். அதனால்தான் அந்த இடம் சேலா-அம்மாலிகோத்* என்று அழைக்கப்படுகிறது.
-
-
2 சாமுவேல் 17:21, 22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அவர்கள் போன பின்பு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிலிருந்து வெளியே வந்தார்கள். தாவீது ராஜாவிடம் போய், “உடனே கிளம்பி, யோர்தானைக் கடந்துபோய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இப்படியெல்லாம் ஆலோசனை கொடுத்திருக்கிறார்”+ என்று சொன்னார்கள். 22 உடனே தாவீதும் அவருடன் இருந்த எல்லா ஆட்களும் எழுந்து யோர்தானைக் கடந்தார்கள். விடிவதற்குள், ஒருவர் விடாமல் அத்தனை பேரும் யோர்தானைக் கடந்திருந்தார்கள்.
-