எஸ்றா 3:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள். சங்கீதம் 106:47 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 47 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, எங்களைக் காப்பாற்றுங்கள்.+மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேருங்கள்.+அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்.சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+ ஏசாயா 49:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+ மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+ எரேமியா 31:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும். தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+
11 அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.
47 எங்கள் கடவுளாகிய யெகோவாவே, எங்களைக் காப்பாற்றுங்கள்.+மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேருங்கள்.+அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்.சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+
13 வானமே, சந்தோஷத்தில் பாடு! பூமியே, பூரித்துப் பாடு!+ மலைகளே, மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்யுங்கள்!+ ஏனென்றால், யெகோவா தன்னுடைய ஜனங்களுக்கு ஆறுதல் தந்திருக்கிறார்.+கஷ்டத்தில் தவிக்கிற தன்னுடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டியிருக்கிறார்.+
12 அவர்கள் சீயோன் மலைக்கு வந்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.+யெகோவா தானியத்தையும் புதிய திராட்சமதுவையும்+ எண்ணெயையும்ஆட்டுக்குட்டிகளையும் கன்றுக்குட்டிகளையும்+ அவர்களுக்குக் கொடுப்பார்.அவர் வாரிவழங்கும் நன்மைகளால்* அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் களைகட்டும். தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போல+ அவர்கள் ஆவார்கள்.அவர்கள் இனி ஒருநாளும் சோர்ந்துபோக மாட்டார்கள்.+