-
எஸ்தர் 9:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 ஏனென்றால், யூதர்களுடைய எதிரியும் ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகனுமான ஆமான்,+ யூதர்களைத் தீர்த்துக்கட்ட+ சதித்திட்டம் தீட்டியிருந்தான். அவர்களைக் கதிகலங்க வைக்கவும் அவர்களை ஒழித்துக்கட்டவும் ‘பூர்’+ என்ற குலுக்கலைப் போட்டிருந்தான். 25 ஆனால் ராஜாவிடம் போய் எஸ்தர் பேசியதும், “யூதர்களுக்கு எதிராக அந்தச் சதிகாரன் தீட்டிய திட்டம்+ அவனுக்கே பலிக்கட்டும்” என்ற ஆணையை ராஜா எழுதிக் கொடுத்தார்.+ அதன்படியே, ஆமானும் அவனுடைய மகன்களும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள்.+
-