-
நீதிமொழிகள் 5:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவன் புத்திமதியைக் கேட்காததால் செத்துப்போவான்.
அடிமுட்டாளாக இருப்பதால் வழிதவறிப் போவான்.
-
-
மல்கியா 3:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 நியாயத்தீர்ப்பு கொடுப்பதற்காக நான் உங்களிடம் வருவேன். எனக்குப் பயந்து நடக்காத சூனியக்காரர்களுக்கும்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கும், பொய் சத்தியம் செய்கிறவர்களுக்கும்,+ கூலியாட்களை ஏமாற்றுகிறவர்களுக்கும்,+ விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* அடக்கி ஒடுக்குகிறவர்களுக்கும்,+ வேறு தேசத்து ஜனங்களுக்கு உதவி செய்யாதவர்களுக்கும்*+ எதிராகச் சாட்சி சொல்ல நான் வேகமாக வருவேன்” என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
-
-
1 கொரிந்தியர் 6:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அநீதிமான்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?+ ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ சிலையை வணங்குகிறவர்கள்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள்,+ ஆண் விபச்சாரக்காரர்கள்,*+ ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள்,+ 10 திருடர்கள், பேராசைக்காரர்கள்,+ குடிகாரர்கள்,+ சபித்துப் பேசுகிறவர்கள்,* கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.+
-