உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 38:8-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 கருப்பையிலிருந்து வருவதுபோல் கடல் புரண்டு வந்தபோது,

      அதற்கு அணை போட்டது யார்?+

       9 நான் மேகங்களால் அதைப் போர்த்தினேன்.

      கருமேகங்களால் அதை மூடினேன்.

      10 அதற்கு ஒரு எல்லைக்கோடு கிழித்தேன்.

      கதவுகளும் தாழ்ப்பாள்களும் வைத்தேன்.+

      11 ‘பொங்கிவரும் அலைகள் இதுவரை வரலாம், இதற்குமேல் வரக் கூடாது.

      இந்தக் கோட்டைத் தாண்டக் கூடாது’ என்று கட்டளை போட்டேன்;+ அப்போதெல்லாம் நீ எங்கே இருந்தாய்?

  • சங்கீதம் 33:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவர் கடல் நீரை அணைபோல் தேக்கி வைக்கிறார்.+

      பொங்கியெழும் தண்ணீரைக் களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறார்.

  • சங்கீதம் 104:6-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 ஆடையினால் போர்த்துவதுபோல் ஆழ்கடல்களினால் நீங்கள் அதைப் போர்த்தினீர்கள்.+

      மலைகளுக்குமேல் தண்ணீர் நின்றது.

       7 உங்கள் அதட்டலைக் கேட்டு தண்ணீர் விலகி ஓடியது.+

      உங்கள் இடிமுழக்கத்தைக் கேட்டு பயந்து ஓடியது.

       8 நீங்கள் ஏற்படுத்திய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தது.

      அதனால் மலைகள் உயர்ந்தன,+ பள்ளத்தாக்குகள் இறங்கின.

       9 தண்ணீர் மறுபடியும் இந்தப் பூமியை மூடிவிடாமல் இருப்பதற்காக,

      அதற்கு எல்லையைக் குறித்தீர்கள்.+

  • எரேமியா 5:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 ‘உங்களுக்கு என்மேல் பயமே இல்லையா?’ என்று யெகோவா கேட்கிறார்.

      ‘நீங்கள் என் முன்னால் நடுங்க வேண்டாமா?

      நான்தானே கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன்?

      நான்தானே அதற்கு நிரந்தர எல்லைக்கோட்டைக் கிழித்தேன்?

      கடலின் அலைகள் புரண்டு வந்தாலும் அந்தக் கோட்டைத் தாண்ட முடியாது.

      அவை இரைச்சல் போட்டாலும் அதைக் கடக்க முடியாது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்