-
1 சாமுவேல் 2:22-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அப்போது, ஏலி மிகவும் வயதானவராக இருந்தார். தன்னுடைய மகன்கள் இஸ்ரவேலர்களிடம் நடந்துகொண்ட விதத்தைப்+ பற்றியெல்லாம் அவர் கேள்விப்பட்டார். சந்திப்புக் கூடாரத்தின் வாசலில் சேவை செய்த பெண்களோடு அவர்கள் உறவுகொண்ட விஷயத்தையும்+ கேள்விப்பட்டார். 23 அதனால் அவர்களிடம், “ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? நீங்கள் செய்கிற கெட்ட காரியங்களைப் பற்றி எல்லாரும் என்னிடம் சொல்கிறார்கள். 24 அப்படிச் செய்யாதீர்கள், என் பிள்ளைகளே. யெகோவாவின் ஜனங்களிடமிருந்து நான் உங்களைப் பற்றி ஒரு நல்ல விஷயத்தைக்கூட கேள்விப்படவில்லை. 25 ஒருவன் இன்னொருவனுக்கு விரோதமாகப் பாவம் செய்தால், பாவம் செய்தவனுக்கு உதவச் சொல்லி யாராவது யெகோவாவிடம் கேட்க முடியும்.* ஆனால், ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாகவே பாவம் செய்தால்,+ யார் அவனுக்காக வேண்டிக்கொள்ள முடியும்?” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவர்கள் தங்களுடைய அப்பாவின் பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அதனால், அவர்களை அழிக்க யெகோவா முடிவுசெய்தார்.+
-
-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-