9 பழங்காலத்திலிருந்து நடந்த விஷயங்களை நினைத்துப் பாருங்கள்.
நானே கடவுள், என்னைத் தவிர வேறு யாரும் இல்லை.
நானே கடவுள், என்னைப் போல யாருமே இல்லை.+
10 நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன்.
அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.+
‘நான் நினைத்தது நிச்சயம் நிறைவேறும்.+
விரும்புவதையெல்லாம் நான் செய்து முடிப்பேன்’+ என்று சொல்கிறேன்.