9 அப்போது அவர், “நீ புறப்பட்டுப் போய் இந்த ஜனங்களிடம்,
‘நீங்கள் காதால் கேட்டுக்கொண்டே இருந்தாலும்,
புரிந்துகொள்ள மாட்டீர்கள்.
நீங்கள் கண்ணால் பார்த்துக்கொண்டே இருந்தாலும்,
எதையும் தெரிந்துகொள்ள மாட்டீர்கள்’+ என்று சொல்.
10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,
காதுகளால் கேட்காமலும்,+
இதயத்தால் உணராமலும்,+
என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காக
இவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.
இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.
இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார்.