உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 37:37, 38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 அதனால், அசீரிய ராஜாவான சனகெரிப் நினிவேக்குத்+ திரும்பிப் போய் அங்கேயே தங்கினான்.+ 38 ஒருநாள், அவனுடைய தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் அவன் மண்டிபோட்டு வணங்கிக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய மகன்கள் அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு,+ அரராத் பகுதிக்குத்+ தப்பியோடினார்கள். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் எசரத்தோன்+ ராஜாவானான்.

  • ஏசாயா 45:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 மற்ற தேசங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களே,

      நீங்கள் ஒன்றுகூடுங்கள், திரண்டு வாருங்கள்.+

      செதுக்கப்பட்ட சிலைகளைச் சுமந்து செல்கிறவர்களுக்கும்,

      காப்பாற்ற முடியாத தெய்வங்களிடம் வேண்டுகிறவர்களுக்கும் அறிவே இல்லை.+

  • ஏசாயா 46:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அதைத் தோளின் மேல் சுமந்துகொண்டு போகிறார்கள்.+

      பின்பு, அதை அதன் இடத்தில் வைக்கிறார்கள்; அது அங்கேயே நிற்கிறது.

      அந்த இடத்தைவிட்டு அது நகருவதே இல்லை.+

      அவர்கள் அதைப் பார்த்து சத்தமாக வேண்டுகிறார்கள், ஆனால் அது பதில் கொடுப்பதே இல்லை.

      அந்தச் சிலையால் யாரையுமே கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடிவதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்