உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 5:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 பரலோகப் படைகளின் யெகோவா நானே. இஸ்ரவேல் ஜனங்கள்தான் என் திராட்சைத் தோட்டம்.+

      யூதா மக்கள்தான் நான் ஆசையோடு நட்ட திராட்சைக் கொடி.

      அவர்கள் நியாயமாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன்.+

      ஆனால், அநியாயம்தான் செய்தார்கள்.

      நீதியாக நடப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

      ஆனால், அநீதிக்கு ஆளானவர்களின் கதறல் சத்தம்தான் கேட்டது”+ என்று சொல்கிறார்.

  • ஏசாயா 59:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 உண்மை காணாமல்போய்விட்டது.+

      கெட்ட வழிக்குப் போகாதவர்கள் சூறையாடப்படுகிறார்கள்.

      எங்குமே நியாயம் இல்லை.+

      யெகோவா இதைப் பார்த்துக் கோபப்பட்டார்.

  • எரேமியா 5:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எருசலேமின் வீதிகளில் போய்த் தேடிப் பாருங்கள்.

      நாலாபக்கங்களிலும் சுற்றிப் பாருங்கள்.

      பொது சதுக்கங்களில் வலைவீசித் தேடுங்கள்.

      நியாயத்தோடும் உண்மையோடும் நடக்கிற யாராவது இருக்கிறார்களா என்று பாருங்கள்.+

      அப்படி ஒருவரையாவது கண்டுபிடித்தீர்கள் என்றால்,

      நான் எருசலேமை மன்னித்துவிடுகிறேன்.

  • ஆமோஸ் 6:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 செங்குத்தான பாறையில் குதிரைகள் ஓடுமா?

      அங்கே எவனாவது மாடுகளை வைத்து உழுவானா?

      நீங்களோ நீதி நியாயத்தைப் புரட்டி,*

      ஜனங்களின் வாழ்க்கையை எட்டிபோல் கசப்பாக்கினீர்கள்.+

  • ஆபகூக் 1:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 சட்டத்தை யாரும் மதிப்பதே இல்லை.

      எங்குமே நியாயம் இல்லை.

      நீதிமானைக் கெட்டவன் ஆட்டிப்படைக்கிறான்.

      அதனால்தான், நீதி புரட்டப்படுகிறது”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்