15 ஆனால், இன்று நான் கொடுக்கிற கட்டளைகளையும் சட்டதிட்டங்களையும் கவனமாகக் கடைப்பிடிக்காமலும், உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடக்காமலும் இருந்தால் இந்த எல்லா சாபங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
29 நீங்கள் பட்டப்பகலில் குருடனைப் போல் தட்டுத்தடுமாறுவீர்கள்.+ எந்தக் காரியத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்காது. நீங்கள் எப்போதும் மோசடி செய்யப்படுவீர்கள், கொள்ளையடிக்கப்படுவீர்கள். உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்.+