9 சீயோனுக்காக நல்ல செய்தியைக் கொண்டுவருபவளே,+
உயரமான மலைக்குப் போ.
எருசலேமுக்காக நல்ல செய்தியைக் கொண்டுவருபவளே,
உன் குரலை உயர்த்தி சத்தமாகச் சொல்.
பயப்படாமல் தைரியமாகச் சொல்.
“இதோ, உங்கள் கடவுள் வருகிறார்” என்று யூதாவிலுள்ள நகரங்களில் சொல்.+
10 உன்னதப் பேரரசராகிய யெகோவா பலம்படைத்தவராக வருவார்.
அவருடைய கை அவருக்காக ஆட்சி செய்யும்.+
இதோ! அவர் பரிசை எடுத்துக்கொண்டு வருகிறார்.
கொடுக்கப்போகிற கூலியை எடுத்துக்கொண்டு வருகிறார்.+