உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 2:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அங்கே வருகிற பலதரப்பட்ட ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.+

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.+

       4 ஜனங்களுக்கு அவர் தீர்ப்பு கொடுப்பார்.

      பலதரப்பட்ட ஜனங்களின் விவகாரங்களைச் சரிசெய்வார்.

      அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள்.

      ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.+

      ஒரு ஜனத்துக்கு எதிராக இன்னொரு ஜனம் வாள் எடுக்காது.

      போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.+

  • ஏசாயா 11:6-9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 அப்போது, ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்.+

      வெள்ளாட்டுக் குட்டி சிறுத்தையோடு படுத்துக்கொள்ளும்.

      கன்றுக்குட்டியும் சிங்கமும் கொழுத்த காளையும்* ஒன்றாக இருக்கும்.*+

      ஒரு சின்னப் பையன் அவற்றை ஓட்டிக்கொண்டு போவான்.

       7 பசுவும் கரடியும் சேர்ந்து மேயும்.

      அவற்றின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்.

      சிங்கம் மாட்டைப் போல வைக்கோல் தின்னும்.+

       8 பால் குடிக்கும் குழந்தை நாகப்பாம்புப் புற்றின் மேல் விளையாடும்.

      பால் மறந்த பிள்ளை விஷப் பாம்பின் பொந்தில் தன் கையை விடும்.

       9 என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது.+

      எந்தக் கேடும் வராது.+

      ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல

      பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+

  • மீகா 4:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 பல தேசங்களிலிருந்து வருகிற ஜனங்கள் மற்றவர்களைப் பார்த்து,

      “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்குப் போகலாம்.

      யாக்கோபின் கடவுளுடைய ஆலயத்துக்குப் போகலாம்.+

      அவர் தன்னுடைய வழிகளை நமக்குக் கற்றுக்கொடுப்பார்.

      நாம் அவர் பாதைகளில் நடப்போம்” என்று சொல்வார்கள்.

      ஏனென்றால், சீயோனிலிருந்து சட்டமும்,*

      எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் புறப்படும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்