உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 9:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 உலகத்துக்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.+

      தேசங்களுக்கு நியாயமான தீர்ப்பு கொடுப்பார்.+

  • சங்கீதம் 58:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பொல்லாதவன் பழிவாங்கப்பட்டதைப் பார்த்து நீதிமான் சந்தோஷப்படுவான்.+

      அவனுடைய பாதங்களில் பொல்லாதவனின் இரத்தம் வழிந்தோடும்.+

      11 அப்போது, “நீதிமான்களுக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்” என்றும்,+

      “பூமியை நியாயந்தீர்க்கிற கடவுள் ஒருவர் நிச்சயமாகவே இருக்கிறார்”+ என்றும் மனிதர்கள் சொல்வார்கள்.

  • சங்கீதம் 85:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பூமியிலிருந்து உண்மைத்தன்மை துளிர்விடும்.

      வானத்திலிருந்து நீதி எட்டிப் பார்க்கும்.+

  • சங்கீதம் 85:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவருக்கு முன்னால் நீதி நடந்து போகும்.+

      அவர் அடியெடுத்து வைப்பதற்கு அது பாதை அமைத்துக் கொடுக்கும்.

  • சங்கீதம் 96:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 ஏனென்றால், யெகோவா வருகிறார்.*

      அவர் பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார்.

      அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார்.+

      மக்களுக்கு உண்மைத்தன்மையோடு* தீர்ப்பு கொடுப்பார்.+

  • சங்கீதம் 97:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+

      நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+

  • ஏசாயா 61:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பூமி செடிகளை விளைய வைப்பது போலவும்,

      தோட்டம் விதைகளை முளைக்கப் பண்ணுவது போலவும்,

      உன்னதப் பேரரசராகிய யெகோவா

      நீதியையும்+ புகழையும் எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் துளிர்க்க வைப்பார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்