9 ஏனென்றால், இந்த ஜனங்கள் அடங்காதவர்கள்,+ பொய்யும் பித்தலாட்டமும் செய்கிற பிள்ளைகள்.+
யெகோவாவின் சட்டத்தை கேட்க மனமில்லாத பிள்ளைகள்.+
10 தரிசனம் பார்க்கிறவர்களிடம், ‘தரிசனங்களைப் பார்க்காதீர்கள்’ என்று அவர்கள் சொல்கிறார்கள்.
தீர்க்கதரிசனம் சொல்கிறவர்களிடம், ‘நீங்கள் பார்க்கிற நிஜமான தரிசனங்களைச் சொல்லாதீர்கள்.+
எங்கள் காதுக்கு இனிமையானதைச் சொல்லுங்கள்; நீங்களாகவே கற்பனை செய்து சொல்லுங்கள்.+