-
வெளிப்படுத்துதல் 22:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 பின்பு, வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆற்றை அவர் எனக்குக் காட்டினார்;+ அது பளிங்குபோல் பளபளத்தது. கடவுளுடைய சிம்மாசனத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவருடைய+ சிம்மாசனத்திலிருந்தும் அது புறப்பட்டு, 2 நகரத்தின் முக்கியத் தெரு நடுவில் பாய்ந்தோடியது. ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் வாழ்வு தரும் மரங்கள் இருந்தன. அவை மாதத்துக்கு ஒரு தடவை என வருஷத்துக்கு 12 தடவை பழம் கொடுத்தன; அவற்றின் இலைகள் தேசத்தார் குணமாவதற்கு உதவின.+
-