17 யெகோவாவே, ஒரு கர்ப்பிணி பிரசவ வேதனைப்படுவது போல,
வலியில் கதறுவது போல,
எங்களைக் கதற வைத்துவிட்டீர்கள்.
18 நாங்கள் கர்ப்பமானோம்,
பிரசவ வேதனையில் துடித்தோம்.
ஆனால், வெறும் காற்றைப் பெற்றெடுத்தோம்.
தேசத்தை நிரப்ப எங்களுக்குப் பிள்ளைகள் பிறக்கவில்லை.
எங்களால் தேசத்தைக் காப்பாற்ற முடியவில்லை.