உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 19:14-19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அசீரிய ராஜா அனுப்பிய கடிதங்களைத் தூதுவர்களிடமிருந்து எசேக்கியா வாங்கிப் படித்தார். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்குப் போய் அவற்றை* யெகோவாவின் முன்னால் விரித்து வைத்து,+ 15 யெகோவா முன்னால் இப்படி ஜெபம் செய்தார்:+ “யெகோவாவே, இஸ்ரவேலின் தேவனே, கேருபீன்களுக்கு மேலே* வீற்றிருப்பவரே,+ நீங்கள் ஒருவர்தான் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களுக்கும் கடவுள்.+ நீங்கள்தான் வானத்தையும் பூமியையும் படைத்த உண்மைக் கடவுள். 16 யெகோவாவே, தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள்!+ யெகோவாவே, உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள்!+ உயிருள்ள கடவுளாகிய உங்களைப் பழித்து சனகெரிப் என்னவெல்லாம் எழுதி அனுப்பியிருக்கிறான் என்று பாருங்கள். 17 யெகோவாவே, அசீரிய ராஜாக்கள் மற்ற தேசங்களையும் அங்கிருந்த நகரங்களையும் அழித்துப்போட்டது உண்மைதான்.+ 18 அங்கிருந்த மக்கள் வணங்கிய தெய்வங்களையும் நெருப்பில் எரித்துப்போட்டார்கள். அவையெல்லாம் கடவுள் கிடையாதே,+ மனுஷர்கள் செய்தவைதானே,+ வெறும் மரக்கட்டையும் கல்லும்தானே. அதனால்தான் அவர்களால் அவற்றை அழிக்க முடிந்தது. 19 ஆனால் யெகோவாவே, எங்கள் கடவுளே, நீங்கள் மட்டும்தான் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.+ அதனால் யெகோவாவே, எதிரியின் கையிலிருந்து தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்