உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 யெகோவாவே, உங்களைப் போல ஒரு கடவுள் உண்டா?+

      பரிசுத்தத்தின் சிகரமே,+ யார் உங்களுக்கு ஈடாக முடியும்?

      நீங்கள் அற்புதங்களைச் செய்கிறவர்.+

      பயபக்தியோடு போற்றிப் புகழப்பட வேண்டியவர்.

  • 2 ராஜாக்கள் 19:22-24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்!

      அவரையே நிந்தித்துவிட்டாய்!+

      அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+

      அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+

      23 தூதுவர்களை அனுப்பி+ யெகோவாவுக்கே சவால் விட்டு,+

      ‘ஏராளமான போர் ரதங்களோடு வருவேன்,

      மலைகளின் உச்சிக்கே ஏறுவேன்,

      லீபனோனின் எல்லைகளுக்குப் போவேன்.

      அங்கே உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களையும் செழிப்பான ஆபால் மரங்களையும் வெட்டுவேன்;

      அதன் எல்லைகளுக்கும், அடர்த்தியான காடுகளுக்கும் போவேன்.

      24 கிணறுகளைத் தோண்டி, புதுத் தண்ணீரைக் குடிப்பேன்;

      என் பாதம் பட்டதும் எகிப்தின் ஆறுகளெல்லாம்* வறண்டுபோகும்’ என்று சொன்னாய்.

  • ஏசாயா 10:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அந்த நாளில், இஸ்ரவேலில் மீதியாக இருப்பவர்களும்,

      யாக்கோபின் வம்சத்தாரில் உயிர்தப்பியவர்களும்

      தங்களைத் தாக்கியவனை இனியும் நம்பியிருக்க மாட்டார்கள்.+

      யெகோவாவையே நம்பியிருப்பார்கள்.

      இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே உண்மை மனதோடு சார்ந்திருப்பார்கள்.

  • எசேக்கியேல் 39:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 என்னுடைய ஜனங்களான இஸ்ரவேலர்களின் நடுவில் என் பரிசுத்த பெயரை மகிமைப்படுத்துவேன். என்னுடைய பரிசுத்தமான பெயரைக் கெடுக்க இனி யாரையும் விட மாட்டேன். நான் யெகோவா என்றும் இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுள்+ என்றும் எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்வார்கள்.’+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்