-
எரேமியா 5:26-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 என் ஜனங்களின் நடுவில் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் பறவைகளைப் பிடிக்கிற வேடர்களைப் போலப் பதுங்கியிருக்கிறார்கள்.
பயங்கரமான கண்ணிகளை வைக்கிறார்கள்.
மனுஷர்களைப் பிடிக்கிறார்கள்.
இப்படிக் குறுக்கு வழியில்தான் அவர்கள் செல்வத்தையும் செல்வாக்கையும் சம்பாதித்திருக்கிறார்கள்.
28 அவர்கள் கொழுத்துப் போயிருக்கிறார்கள்.
கெட்ட காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்கிறார்கள்.
-
-
மீகா 2:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “சூழ்ச்சி செய்கிறவர்களுக்குக் கேடுதான் வரும்.
அவர்கள் படுக்கையில் படுத்துக்கொண்டே சதித்திட்டம் போடுகிறார்கள்.
விடிந்ததும் அதைச் செய்து முடிக்கிறார்கள்.
நினைத்ததைச் செய்யும் சாமர்த்தியம் அவர்களுக்கு இருக்கிறது.+
2 வயல்கள்மேல் கண்வைத்து, அவற்றைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்.+
வீடுகள்மேல் ஆசைவைத்து, அவற்றை அபகரிக்கிறார்கள்.
அடுத்தவரின் வீட்டைப் பறிக்கிறார்கள்.+
இன்னொருவரின் சொத்தைச் சூறையாடுகிறார்கள்.
-
-
மீகா 6:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அநியாயமாகச் சம்பாதித்த பொருள்கள் அக்கிரமக்காரனின் வீட்டில் இன்னும் இருக்கிறதா?
அருவருப்பான போலி எடைக்கற்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதா?
-