4 நகரத்தின் மதில் உடைக்கப்பட்டது;+ கல்தேயர்கள் நகரத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, எல்லா வீரர்களும் ராஜாவின் தோட்டத்துக்குப் பக்கத்தில் இரண்டு மதில்களுக்கு இடையிலிருந்த நுழைவாசல் வழியாக ராத்திரியில் தப்பித்து ஓடினார்கள். அரபா வழியாக ராஜா தப்பித்துப் போனார்.+
5 இந்த நகரத்தின் செல்வங்கள், வளங்கள், விலைமதிப்புள்ள பொருள்கள், ராஜாக்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றையுமே எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.+ அவர்கள் அவற்றையெல்லாம் கைப்பற்றி பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.+