25 அடுத்ததாக, முட்டுச்சுவருக்கும் ராஜாவின் அரண்மனையை+ ஒட்டிய கோபுரத்துக்கும், அதாவது ‘காவலர் முற்றத்தில்’+ இருந்த உயர்ந்த கோபுரத்துக்கும், எதிரே உள்ள பகுதியை உசாயின் மகன் பாலால் பழுதுபார்த்தார். அடுத்த பகுதியை, பாரோஷின் மகன்+ பெதாயா பழுதுபார்த்தார்.
21 அதனால், எரேமியாவை ‘காவலர் முற்றத்தில்’+ அடைத்து வைக்கும்படி சிதேக்கியா ராஜா கட்டளை கொடுத்தார். நகரத்தில் ரொட்டி கிடைக்கும்வரை+ ரொட்டி சுடுகிறவர்களின் தெருவிலிருந்து+ தினமும் எரேமியாவுக்கு ஒரு வட்டமான ரொட்டி கொடுக்கப்பட்டது. அவர் ‘காவலர் முற்றத்திலேயே’ வைக்கப்பட்டிருந்தார்.