உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 7:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உன் ராஜ வம்சமும் ஆட்சியும் என்றென்றும் நிலைக்கும். உன்னுடைய சிம்மாசனம் என்றென்றும் நிலைக்கும்”+ என்று சொல்’” என்றார்.

      17 தரிசனத்தில் சொல்லப்பட்ட இந்த எல்லா விஷயங்களையும் தாவீதிடம் நாத்தான் சொன்னார்.+

  • 1 ராஜாக்கள் 2:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவா என்னிடம், ‘உன் வாரிசுகள் எனக்கு உண்மையாக இருந்தால், முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால்,+ இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று வாக்குக் கொடுத்திருந்தார், இந்த வாக்கை அவர் நிறைவேற்றுவார்.

  • சங்கீதம் 89:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 என் ஊழியன் தாவீதைக் கண்டேன்.+

      என்னுடைய பரிசுத்த எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.+

  • சங்கீதம் 89:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அவனுடைய சந்ததியை என்றென்றும் நிலைத்திருக்கச் செய்வேன்.

      அவனுடைய சிம்மாசனத்தை வானம்போல் என்றுமே நிலைநிற்க வைப்பேன்.+

  • ஏசாயா 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 அவருடைய ஆட்சியின் வளர்ச்சிக்கும்

      சமாதானத்துக்கும் முடிவே இருக்காது.+

      அவர் தாவீதின் சிம்மாசனத்தில் உட்காருவார்.+

      அதுமுதல் என்றென்றும்,

      நியாயத்தோடும்+ நீதியோடும்+ ஆட்சி செய்து,

      அதை* உறுதியாக நிலைநாட்டுவார்.+

      பரலோகப் படைகளின் யெகோவாவுடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

  • லூக்கா 1:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 அவர் உயர்ந்தவராக இருப்பார்;+ உன்னதமான கடவுளின் மகன் என்று அழைக்கப்படுவார்;+ அவருடைய தந்தையான தாவீதின் சிம்மாசனத்தைக் கடவுளாகிய யெகோவா* அவருக்குக் கொடுப்பார்.+ 33 அவர் ராஜாவாக யாக்கோபுடைய வம்சத்தை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய ஆட்சிக்கு முடிவே இருக்காது”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்